சூடானில் பீங்கான் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழப்பு. காணாமல் போன தமிழர்களின் நிலை குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்.
சூடான் விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கி வருவதாக பிரதமர் மோடி தகவல். மூன்று தமிழர்கள் பற்றிய தகவல்களைத் திரட்ட துரித நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சர் தமிழில் ட்வீட்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளதால் போக்குவரத்து மாற்றம்.
கர்நாடகாவில், 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை. சட்டவிதிகள்படியே தேர்தல் நடத்தப்படுவதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பிரமாணப்பத்திரம் தாக்கல்.
உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்.