பி.எஸ்.எல்.வி.சி-39. ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது

பி.எஸ்.எல்.வி.சி-39. ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது

பி.எஸ்.எல்.வி.சி-39. ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது
Published on

பி.எஸ்.எல்.வி. சி–39 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்குகிறது. 

இயற்கை சீற்றங்களை கண்காணிக்க ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–39 ராக்கெட் நாளை மாலை 6.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 29 மணி நேர கவுண்டவுன் இன்று பகல் 1.59 மணிக்கு தொடங்க உள்ளது.  இந்த ராக்கெட் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். மேலும் இந்த ராக்கெட்டில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com