\
எப்போது பட்ஜெட் கூட்டத்தொடர்?: இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை

எப்போது பட்ஜெட் கூட்டத்தொடர்?: இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை

எப்போது பட்ஜெட் கூட்டத்தொடர்?: இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை
Published on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தும் தேதி குறித்து முடிவு செய்வது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் தேதியை இறுதி செய்வதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிதியாண்டு முதற்கொண்டு ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படாமல், பொது பட்ஜெட்டுடன் இணைந்தே தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com