இணையவழி ரயில் டிக்கெட் முன்பதிவு - இன்றும், நாளையும் செய்யமுடியாது

இணையவழி ரயில் டிக்கெட் முன்பதிவு - இன்றும், நாளையும் செய்யமுடியாது
இணையவழி ரயில் டிக்கெட் முன்பதிவு - இன்றும், நாளையும் செய்யமுடியாது

ஐஆர்சிடிசியின் இணைய தள தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இணைய வழி ரயில் பயண முன்பதிவு சேவை இன்றும் நாளையும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையை மின்னணுமயம் ஆக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஐஆர்சிடிசி இணைய தளத்தில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காக 23ஆம் தேதி மாலை 6.15 மணி முதல் 24ஆம் தேதி காலை 7 மணி வரை டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் சேவை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இடைப்பட்ட காலத்தில் இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com