1 மணி செய்திகள்
1 மணி செய்திகள்முகநூல்

1 மணி தலைப்புச் செய்திகள்: நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞர் முதல் மோகன் பகவத் அறிவுரை வரை

இன்றைய 1 மணி செய்தியானது, நீதிமன்ற வளாகத்திலேயே வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர் முதல் மோகன் பகவத் அறிவுரை வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
Published on
  • நெல்லையில் நீதிமன்ற வாயில் அருகே இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது. கைதானவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை முன் பகை காரணமாக கொலை செய்ததாக வாக்குமூலம்.

  • ஈரோட்டில் 951 கோடி ரூபாயில் 559 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 50 ஆயிரத்து 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

  • மத்திய அரசின் தவறான செயல்பாடுகளை கீச்சுக் குரலில் கூட அதிமுக விமர்சிப்பதில்லை எனவும், திமுக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இபிஎஸ் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அழகல்ல எனவும் கருத்து.

சட்டப்பேரவை முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை முதல்வர் மு.க.ஸ்டாலின்கோப்புப்படம்
  • ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.

  • பொங்கல் பண்டிகையில் யுஜிசி-நெட் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் பதிவு. தேர்வு தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமைக்கு கடிதம்.

  • வங்கக் கடலில் நிலவும் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு.12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

  • தஞ்சை பாபநாசம் அருகே திறப்பு விழாவுக்கு முன்பே சேதமான புதிய சாலை. சாலையோர தடுப்புகள் சரிந்தன. நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் விரிசல்.

  • நாடாளுமன்ற வளாகத்தில் தடை விதிக்கப்பட்டதால் விஜய் சவுக் பகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம். ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு மற்றும் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

  • டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் காரை மறித்த எதிர்க்கட்சி எம்பிக்கள். அம்பேத்கரை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்கக் கோரி முழக்கம்.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
எதிர்க்கட்சிகள் போராட்டம்
  • சபாநாயகர் ஒம் பிர்லா அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க இந்தியா கூட்டணி முடிவு. மக்களவையில் ஜனநாயகம் இல்லை என குற்றச்சாட்டு.

  • அமித் ஷாவை கண்டித்து இன்றும் மக்களவையில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் அமளி. வந்தே மாதரம் பாடலை ஒலிக்கச் செய்து அவையை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்.

  • மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு. எம்.பி.க்களின் போராட்டம் அவை நடவடிக்கைகளை முடக்கியதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வருத்தம்.

  • அம்பேத்கரை அவமதித்ததாக அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் விசிகவினர் 2ஆவது நாளாக போராட்டம். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினர் கைது.

  • சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு. சீரமைப்பு பணிகளுக்கு பின் விரைவு மற்றும் புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கம்.

  • புனேவில் ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞருக்கு பாடம் புகட்டிய பெண். 26 முறை மாறிமாறி அறைந்து, போதை இளைஞரின் கன்னத்தைப் பழுக்க வைத்த வீடியோ வைரல்.

  • ஹரியானா முன்னாள் முதலமைச்சரும் இந்திய தேசிய லோக் தள கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார். இவர், மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தகவல்.

  • ராமர் கோயிலை விவகாரத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்ற பகுதிகளில் சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என இந்து மத தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அறிவுறுத்தல்.

  • ஜெய்ப்பூரில் ரசாயனம் ஏற்றிச் சென்ற வாகனம் மோதியதில் அருகில் இருந்த 40 வாகனங்களுக்கு பரவிய தீ. 5 பேர் உயிரிழப்பு. 30க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.

  • தொடர்ந்து குறைந்து வருகிறது ஆபரணத் தங்கத்தின் விலை. 4 நாட்களில் 880 ரூபாய் குறைந்த நிலையில், இன்று ஒரு சவரன் 56,320 ரூபாய்க்கு விற்பனை.

  • பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது "விடுதலை 2" திரைப்படம். முதல் காட்சியை ஆர்வமுடன் கண்டுரசித்தனர் ரசிகர்கள்.

  • விடுதலை 2ஆம் பாகத்தை தொடர்ந்து மூன்றாம் பாகம் வருமா? என்ற கேள்விக்கு, “இந்த படத்தின் வரவேற்பை பொறுத்தே அதெல்லாம் யோசிக்கப்படும்” என்று திருச்சியில் ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகர் சூரி சுவாரஸ்ய பதில்.

1 மணி செய்திகள்
‘விடுதலை 3 வருமா? நான் அரசியலிலா? அடுத்த தளபதி நானா? எப்பா ஏய்..’ செய்தியாளர் சந்திப்பில் சூரி கலகல!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com