1 மணி செய்திகள்|தலை உடைந்த பாஜக எம்.பி To ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூடு வரை!
அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாக கூறி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம். பாஜக எம்பிக்களும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு
நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தின்போது ராகுல் காந்தி தள்ளி விட்டதில் தனது மண்டை உடைந்ததாக பாஜக எம்பி பிரதாப் சாரங்கி புகார்.
பாஜக எம்பிக்கள்தான் தம்மை தள்ளிவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதில்..
பாஜக எம்.பி.க்களை தள்ளிவிட்ட ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல். இந்நிலையில், மருத்துவ அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் உறுதி.
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி. க்கள் தாக்கியதாக காங்கிரஸ் தலைவர் கார்கே புகார் கடிதம். அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உரிமை மீறல் நோட்டீஸும் வழங்கினார்.
நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் நீல நிற உடையணிந்து வருகை. அம்பேத்கரின் அடையாளத்தை உணர்த்தும் வகையில் உடை அணிந்து ஆதரவு.
மக்களவை தொடங்கிய உடன் அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளி.மேலும், மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு.
அம்பேத்கரை பாஜக அவமதித்ததாக கூறி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என முழக்கம்.
அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். சேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சூசகம். புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், 5 முனை போட்டியே நிலவும் என உறுதி.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என நாங்கள் முன்பே முடிவு செய்துவிட்டோம் என அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கருத்து.
வரும் சட்டமன்றத் தேர்தலில் இரு முனைப் போட்டியே நிலவும் என அமைச்சர் ரகுபதி பதில். 5 முனைப் போட்டி ஏற்பட வாய்ப்பில்லை எனவும் பேட்டி.
ஆத்தூர் தாமிரபரணி ஆற்று பாலத்திற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டத்தில் ஈடுபட பாஜக முயற்சி. இதனால், பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 5ஆம் தேதி கைதான தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை. அபராதத்துடன் மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
11 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தல் சென்னையில் கோட்டை நோக்கி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பேரணி.
தமிழ்நாட்டில் உள்ள 18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.177.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை.
கேரளாவில் இருந்து தமிழக எல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம். கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோ ஷூட் எடுப்பதில் மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் முனைப்பு காட்டுவதாக விமர்சனம்.
அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் அங்கீகரிக்கப்பட்ட முடிவை பரிசீலனை செய்யக் கோரிய மனு தள்ளுபடி. விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து.
சென்னையில் 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.
ஜமைக்கா நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதன் சிசிடிவி காட்சி வெளியீடு. தாக்குதலில் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சோகம்.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மேலும் 8 வீடுகளை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை. தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 2ஆவது நாளாக பணிப் புறக்கணிப்பு போராட்டம்.
தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சரிவு. சென்னையில் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு. மருத்துவமனைகளில் குரங்கு அம்மை சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகளை அதிகரிக்க அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவு.
ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை.
ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தாயகம் திரும்பினார்.இந்நிலையில், சென்னை வந்த சுழல் நாயகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.