பிரதமர் மோடிக்கு நினைவூட்ட 1350 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர்..!

பிரதமர் மோடிக்கு நினைவூட்ட 1350 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர்..!

பிரதமர் மோடிக்கு நினைவூட்ட 1350 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர்..!
Published on

பிரதமர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இளைஞர் ஒருவர் 1350 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளார்.

ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியை சேர்ந்தவர் முக்திகந்த பிஸ்வால். வயது 30. ரூர்கேலா பகுதியில் இஸ்பேட் பொது மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி இந்த மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படும். மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும். அதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறலாம் என வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் இன்றுவரை அந்த வாக்குறுதி நிறைவேறவில்லை என தெரிகிறது.

கொடுத்த வாக்குறுதியை சொன்னபடி நிறைவேற்ற வேண்டும் என பிரதமரிடம் நேரில் நினைவூட்ட நினைத்த பிஸ்வால் இதற்காக டெல்லி செல்ல நினைத்திருக்கிறார். எனவே தனது அன்றாட தேவைகளுக்கான பொருட்களை ஒரு பையில் வைத்துக் கொண்டு ஒடிசாவிலிருந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார். சுமார் 1350 கி.மீ தூரம் நடந்து சென்ற அவர் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் மயங்கி விழுந்தார். பின்னர் ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது சுய நினைவு திரும்பியுள்ளது. இந்நிலையிலும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாக்குறுதியை நினைவூட்டாமல் நான் சொந்த ஊருக்கு செல்லமாட்டேன் என திட்டவட்டமாக அவர் தெரிவித்துவிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ மருத்துவமனைகளில் வசதி மேம்படுத்தப்படும் என பிரதமர் மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்றுவரை எங்கள் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவ வசதிகள் முறையாக இல்லாத காரணத்தினால் நாளுக்கு நாள் ஏழை எளி மக்கள் இறந்து வருகின்றனர். எனவே பிரதமர் மோடி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

நடைபயணத்தின் போது தேசியக்கொடியையும் தன் கையில் வைத்தே பிஸ்வால் பயணம் செய்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “  நமது நாட்டின் தேசியக்கொடி ஒவ்வொரு முறையும் என்னை ஊக்கப்படுத்துகிறது. அதனால் என் பயணத்தின் அனைத்து கட்டங்களிலும் அதனை வைத்துள்ளேன்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com