மின்சாரத்தை திருடி நாய்களுக்கு ஏசி போட்ட நபர்: ரூ.7 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்!

மின்சாரத்தை திருடி நாய்களுக்கு ஏசி போட்ட நபர்: ரூ.7 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்!

மின்சாரத்தை திருடி நாய்களுக்கு ஏசி போட்ட நபர்: ரூ.7 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்!
Published on
மும்பையில், வளர்ப்பு நாய்களுக்காக மின்சாரத்தைத் திருடி 24 மணி நேரமும் வீட்டில் ஏ.சி பயன்படுத்தியவருக்கு 7 ‌லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
மும்பை பகுதி‌யில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாரம் திருடப்படுவதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். விசாரணையில், அந்த குடியிருப்பின் ஒரு வீட்டில் வசித்து வரும் அமீன் என்பவர்,‌ கட்டடத்தின் மின் இணைப்பு பெட்டியிலிருந்து 34 ஆயிரத்து 465 யூனிட் மின்சாரத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. 
ஏன் இவ்வளவு மின்சாரத்தை திருடினார் என அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். அதற்கு அமீன் கூறிய விளக்கத்தைக் கேட்டு அதிகாரிகள் ஆடிப்போயினர். தான் 3 நாய்களை வளர்ப்பதாகவும், அவைகளுக்கு ஏசி கண்டிப்பாக வேண்டுமென்பதால் மின்சாரத்தை திருடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், ''3 நாய்களை இதமான சூழலில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அந்த நபர் 24 மணி நேரமும் ஏ.சி பயன்படுத்தியுள்ளார்.அமீனுக்கு மின்சாரக்கட்டணம் மற்றும் அபராதம் சேர்த்து ரூ.7 லட்சத்து 22 ஆயிரம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com