காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்

காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்
Published on

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த இரண்டு பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி‌கள் ‌உடனான துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில் இளையராஜா என்பவர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். உயிரிழந்த மற்றொருவர் காவாய் வாமன் ஆவார்.

இளையராஜா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்புதான் ராணுவத்தில் சிப்பாயாக பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவரது மனைவி 5 மாதம் கர்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த 20 நாள்களுக்கு முன்பே சொந்த ஊரான கண்டனிக்கு வந்து தனது குடும்பத்தினரை சந்தித்து விட்டு சென்ற நிலையில், இன்று தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com