\
பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராகத் தமிழக அதிகாரி நியமனம்

பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராகத் தமிழக அதிகாரி நியமனம்

பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராகத் தமிழக அதிகாரி நியமனம்
Published on

பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராகத் தமிழக ஐஏஎஸ் அதிகாரி கோபால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

பிரதமர் அலுவலகத்தின் புதிய அதிகாரிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கோபால கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் செயலாளராக உள்ளார்.

இதுதவிர, 2001-ம் ஆண்டு பீகார் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வான ஸ்ரீதர் என்பவர், பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஹிமாச்சல பிரதேச பிரிவில் 2005-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்ற மீரா மொஹந்தி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com