’’உங்கள் ஜனாதிபதி எப்படி இருக்கிறார்..' - முர்முவை உருவ கேலி செய்த மேற்கு வங்க அமைச்சர்!

’’உங்கள் ஜனாதிபதி எப்படி இருக்கிறார்..' - முர்முவை உருவ கேலி செய்த மேற்கு வங்க அமைச்சர்!
’’உங்கள் ஜனாதிபதி எப்படி இருக்கிறார்..' - முர்முவை உருவ கேலி செய்த மேற்கு வங்க அமைச்சர்!

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் அகில் கிரி, மேற்கு வங்க மாநிலத்தில் நந்திகிராமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அனைவராலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.


குடியரசு தலைவர் திரெளபதி முர்வுவை உருவ கேலி செய்து விமர்சித்ததாக அகில் கிரியின் பேச்சு அமைத்துள்ளது என அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. முன்னதாக மேற்கு வங்க பாஜகவின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் அகில் கிரியை உருக கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, பொது கூட்டத்தில் பேசிய அகில் கிரி, ‘ நான் அழகாக இல்லை என்று சுவேந்து அதிகாரி கூறுகிறார்.. இதை சொன்ன அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்கள்.. உங்கள் ராஷ்டிரபதி எப்படி இருக்கிறார்? நாங்கள் மக்களை அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவதில்லை. உங்கள் ஜனாதிபதியின் நாற்காலியை நாங்கள் மதிக்கிறோம் “ என கூறினார்.


பாஜகவின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரிக்கு பதில் கொடுக்கும் விதமாக அகில் கிரி பேசியதோடு முடித்துயிருக்க வேண்டும். ஆனால் இந்த இடத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்வுவை பற்றி ஏன் பேச வேண்டும் என அனைவராலும் விமர்சிக்கப்ப்பட்டு வருகிறது.


அகில் கிரி பேசிய வீடியோ பதிவை பாஜகவின் பெங்கால் பிரிவு ட்விட்டரில் பகிர்ந்து, ’ முர்மு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். முதல்வர் மம்தா பானர்ஜியையும் அவரது கட்சியும் பழங்குடியினருக்கு எதிரானது” என பதிவிட்டப்பட்டுள்ளது.


மேலும் பாஜக தலைவர்கள் பலரும், இந்த வீடியோவை பகிர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பழங்குடியினருக்கு எதிரானவர்கள் என பேசிவருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com