death person
death personpt desk

மென் பொறியாளரை காரில் வைத்து உயிருடன் எரித்துக் கொன்ற மர்ம நபர்கள்.. திருப்பதியில் நடந்த பகீர்!

திருப்பதி அருகே நேற்று நள்ளிரவு கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்கள். மென் பொறியாளர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மண்டலத்தைச் சேர்ந்த பொப்புராஜப்பள்ளி கிராமத்தில் நேற்று நள்ளிரவு கார் ஒன்றின் மீது பெட்ரோல் ஊற்றிய மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதையடுத்து கார் தீப்பற்றி எரிவதை பார்த்த அந்த பகுதி மக்கள் இது பற்றி சந்திரகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சந்திரகிரி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

இதைத் தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில், ஒரு நபர் உயிருடன் எரிந்து பலியாகி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரோடு எரிக்கப்பட்ட அந்த நபர் வெதுருகுப்பம் மண்டலத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் நாகராஜு என்பது தெரிய வந்தது.

இந்நிலையில், நாகராஜை உயிரோடு எரித்துக் கொலை செய்தவர்கள் யார், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com