திருப்பதி: அமைச்சர் ரோஜா தலைமையில் சங்கராந்தி விழா உற்சாக கொண்டாட்டம்

திருப்பதி: அமைச்சர் ரோஜா தலைமையில் சங்கராந்தி விழா உற்சாக கொண்டாட்டம்
திருப்பதி: அமைச்சர் ரோஜா தலைமையில் சங்கராந்தி விழா உற்சாக கொண்டாட்டம்

திருப்பதியில் அமைச்சர் ரோஜா தலைமையில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் போலீசார் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

திருப்பதியில் உள்ள போலீஸ் கவாத்து மைதானத்தில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா தலைமையில் நேற்றிழரவு சங்கராந்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கட்ரமணா, எஸ்பி.பரமேஸ்வர ரெட்டி, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

முதலில் அமைச்சர் ரோஜா உட்பட பெண்கள் மாக்கோலம் போட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து கோழிப் பந்தயம், ஹரி கதை, கபடி போட்டி உள்ளிட்ட சங்கராந்தி தொடர்பான சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரோஜா, சங்கராந்தி திருவிழா நமது வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

இந்த நேரத்தில் மாநில மக்கள் அனைவருக்கும் என்னுடைய சங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். போலீசார் திருவிழா நாட்களில் கூட தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருப்பதி எஸ்பி.பரமேஸ்வர ரெட்டி, போலீஸ் குடும்பங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.

போலீஸ் குடும்பங்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com