\
பிளாஸ்டிக்கை தடுக்க முடிவு: சணல்‌ பைகளில் திருப்பதி லட்டு!

பிளாஸ்டிக்கை தடுக்க முடிவு: சணல்‌ பைகளில் திருப்பதி லட்டு!

பிளாஸ்டிக்கை தடுக்க முடிவு: சணல்‌ பைகளில் திருப்பதி லட்டு!
Published on

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுவை சணல் பைகளில் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோயிலில் நாளொன்றுக்கு சராசரியாக 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கு சுமார் 70 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்காக ‌நூறு சதவிகிதம் மறு சுழற்சி செய்யக்கூடிய அலுமினியம் ஃபாயில் (FOIL) உடன் கூடிய சணல் பைகளில் ‌லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக, திருப்பதி தேவஸ்தானம், ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவ‌னம் மற்றும் ஜூட் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com