திருப்பதி: அதிகரிக்கும் பக்தர் கூட்டம்.. கொட்டும் உண்டியல் வசூல்-எத்தனை கோடிகள் தெரியுமா?

திருப்பதி: அதிகரிக்கும் பக்தர் கூட்டம்.. கொட்டும் உண்டியல் வசூல்-எத்தனை கோடிகள் தெரியுமா?
திருப்பதி: அதிகரிக்கும் பக்தர் கூட்டம்.. கொட்டும் உண்டியல் வசூல்-எத்தனை கோடிகள் தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2022-23 ஆம் நிதி ஆண்டில் உண்டியல் காணிக்கை வருமானம் 1000 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1500 கோடி ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு துவங்கியது முதல், ஜனவரி மாதம் 79 கோடியே 39 லட்சம் ரூபாயும், பிப்ரவரி மாதம் 79 கோடியே 34 லட்ச ரூபாயும், மார்ச் மாதம் 128 கோடியே 60 லட்சம் ரூபாயும், ஏப்ரல் மாதம் 126 கோடியே 65 லட்சம் ரூபாயும், மே மாதம் 130 கோடியே 29 லட்சம் ரூபாயும், ஜூன் மாதம் 123 கோடியே 76 லட்சம் ரூபாயும், ஜூலை மாதம் 139 கோடியே 75 லட்சம் ரூபாயும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

அதேபோல், ஆகஸ்ட் மாதம் 138 கோடியே 34 லட்சம் ரூபாயும், செப்டம்பர் மாதம் 122 கோடியே 19 லட்சம் ரூபாயும், அக்டோபர் மாதம் 122 கோடியே 80 லட்சம் ரூபாயும், நவம்பர் மாதம் 125 கோடியே 30 லட்சம் ரூபாய் என மொத்தம் கடந்த 11 மாதங்களில் மட்டும் 1316 கோடியே 47 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர்.

இதற்கு முன் இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். தற்போதைய நிலவரத்தின்படி ஒவ்வொரு நாளும் நான்கு முதல் ஐந்து கோடி ரூபாயை பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

இதேநிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நடப்பு டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 4 மாதங்களில் மட்டும் ஏழுமலையானுக்கு மேலும் 500 கோடி ரூபாய் காணிக்கை வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே நடப்பு நிதியாண்டில் ஏழுமலையான் கோவில் உண்டியல் 1500 கோடி ரூபாயை காணிக்கையாக பெற்று புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com