இந்தியா
திருப்பதி கோயில் 9.30 மணி நேரம் மூடல்: சந்திர கிரகணம் எதிரொலி!
திருப்பதி கோயில் 9.30 மணி நேரம் மூடல்: சந்திர கிரகணம் எதிரொலி!
ஆகஸ்ட் 7 ஆம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை நான்கரை மணியிலிருந்து 8 ஆம் தேதி காலை 2 மணி வரை கோயில் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வழக்கமான வழிபாடுகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 7 ஆம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது.