இந்தியா
திருப்பதியில் சாதனை: ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள் விற்பனை!
திருப்பதியில் சாதனை: ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள் விற்பனை!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் லட்டுகள் விற்பனையாகி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போதெல்லாம், லட்டுகளும் அதிக அளவில் விற்பனையாகும். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பதி கோயிலில் நேற்று ஒருநாள் மட்டும் சுமார் 5 லட்சத்து 13 ஆயிரத்து 566 லட்டுகள் விற்பனையாகியுள்ளது. இது சாதனை யாகும். இதற்கு முன், கடந்த 2016 ஆம் வருடம் ஒரே நாளில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 152 லட்டுகள் விற்கப்பட்டதே சாதனையாக இருந்தது என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

