\
“திருப்பதி லட்டு விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை” - தேவஸ்தானம்

“திருப்பதி லட்டு விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை” - தேவஸ்தானம்

“திருப்பதி லட்டு விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை” - தேவஸ்தானம்
Published on

திருப்பதி தேவஸ்தானத்தில் விற்கப்படும் லட்டுக்களின் விலை உயர்த்தப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தான குழுத் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி, கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த அவர் திருப்பதியில் விற்கப்படும் லட்டுக்களின் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும், தற்போது விற்கப்படும் அதே மானிய விலையில் தான் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com