யெஸ் பேங்க் நெருக்கடி: திட்டமிட்டு ரூ1300 கோடியை எடுத்த திருப்பதி தேவஸ்தானம்

யெஸ் பேங்க் நெருக்கடி: திட்டமிட்டு ரூ1300 கோடியை எடுத்த திருப்பதி தேவஸ்தானம்
யெஸ் பேங்க் நெருக்கடி: திட்டமிட்டு ரூ1300 கோடியை எடுத்த திருப்பதி தேவஸ்தானம்

யெஸ் பேங்கிலிருந்து பணம் எடுக்க நேற்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திருமலா கோயில் நிர்வாகம் ரூ1300 கோடியை எடுத்துள்ளது.

யெஸ் வங்கி, சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வாராக் கடனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதன் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என நிபந்தனை விதித்துள்ளது. இதனால் சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள யெஸ் வங்கி ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

நீண்ட வரிசையில் பலர் காத்திருப்பதை காண முடிந்தது. எனினும் பல மையங்களில் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர். சில இடங்களில் ஆர்பிஐ அறிவிப்பு வெளியான உடனே ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில். சில மாதங்களுக்கு முன்பு திருமலா கோயில் நிர்வாகம் ரூ1300 கோடியை எடுத்துள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது. யெஸ் வங்கியில் பணம் எடுக்க நேற்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சரியாக கணித்து திருமலா நிர்வாகம் பணத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஒருங்கிணைந்த ஆந்திராவில் ஆட்சியில் இருந்த போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிதி நான்கு தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஒய்வி சுப்பா ரெட்டி பொறுப்பேற்ற உடனே கோயில் நிர்வாகிகளிடம் யெஸ் வங்கியில் இருந்து பணத்தை எடுக்கச் சொல்லியுள்ளார். தனியார் வங்கிகளின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, யெஸ் வங்கியில் டெபாசிஸ்ட் செய்திருந்த பணத்தை எடுக்க வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com