திருப்பதி கோசாலையில் பசுக்களுக்கு 'புருசோலேசிஸ்' நோய்
திருப்பதி ஏழுமலையான் கோயில் கோசாலையிலுள்ள 60 மாடுகள் புருசோலேசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பதி, திருமலை, திருச்சானூர், பலமனேர் பகுதிகளில் ஏழுமலையான் கோயில் கோசாலை உள்ளது. இங்கு, 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், பசுக்களிடமிருந்து சேகரிக்கப்படும் பால், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புருசோலேசிஸ் பாதித்த மாடுகளின் பாலை பருகினால் மனிதர்களுக்கும் நோய் தாக்கும் என்பதால், பக்தர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்த திருப்பதி கோசாலை மருத்துவர் ராஜு, புருசோலேசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாடுகள் தனியாக வைத்து பராமரிப்படுவதாகக் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட பசுக்களிடமிருந்து பால் சேகரிக்கப்படுவதில்லை என்பதால் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.