திருப்பதியில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதியில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருப்பதியில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையடுத்து கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும், மூத்தகுடிமக்கள், மாற்றுதிறனாளிகள் உள்ளிட்ட முன்னுரிமை தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
பிரம்மோற்சவம் அக்டோபர் 1 தேதியன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் பிரம்மோற்சவத்தினை முன்னிட்டு கோயிலில் அங்குரார்பனம் நடைபெற்றது. அப்போது, விஷ்வசேனதிபதியை சிறப்பு பூஜையுடன் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டுச்சென்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com