அயோத்தி வழக்கின் பின்னணி..!

அயோத்தி வழக்கின் பின்னணி..!
அயோத்தி வழக்கின் பின்னணி..!

அயோத்தி வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், வழக்கு கடந்துவந்த பாதையை பார்க்கலாம்.

  • அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்திற்கு 3 அமைப்புகள் உரிமை கோரியிருந்தன
  • சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ல் தீர்ப்பு வழங்கியது
  • 2010 செப்.30-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது
  • சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா அமைப்புகள் உட்பட 14 பேர் மேல்முறையீடு செய்தனர்
  • அயோத்தி வழக்கில் சுமுக தீர்வு காண உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்தியஸ்த குழுவின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது
  • இதனையடுத்து 40 நாட்கள் தொடர்ந்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது
  • இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்,ஏ,பாப்டே, சந்திரசூட், அசோக் பூசண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது
  • தீர்ப்பு நாளை வெளியாவதையொட்டி அயோத்தி, மதுரா, வாரணாசியில் உச்சகட்ட பாதுகாப்பு
  • சனிக்கிழமை தீர்ப்பு வழங்குவது மிக அரிது; முக்கியத்துவம் அல்லது மிக அவசர வழக்குகளில் மட்டுமே விடுமுறை நாட்களில் தீர்ப்பு அல்லது உத்தரவு வழங்கப்படும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com