\
‘டிக்டாக்..’ பிரபலம் சுட்டுக்கொலை..! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

‘டிக்டாக்..’ பிரபலம் சுட்டுக்கொலை..! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

‘டிக்டாக்..’ பிரபலம் சுட்டுக்கொலை..! - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Published on

‘டிக்டாக்’ பிரபலம் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லி அருகே அரங்கேறியுள்ளது.

டெல்லியின் புறநகர் பகுதியான நஜஃப்கார் பகுதியை சேர்ந்தவர் மோஹிட் மோர். 27 வயதான இவர் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்தார். வீடியோ பதிவிடும் சீன செயலியான ‘டிக்டாக்’ செயலியின் மீது பிரியம் கொண்ட இவர், பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இவருக்கென அதில் ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது. சுமார் 5 லட்சத்து 33 ஆயிரம் பேர் இவரது ரசிகர்களாக ‘டிக்டாக்’ செயலில் உள்ளனர். 

அத்துடன் இதுவரை 84 லட்சம் விருப்பங்களை இவர் ‘டிக்டாக்’ செயலில் பெற்றுள்ளார். சில உருக்கமான வீடியோக்கள் மூலம் ரசிகர்களை பெற்றவர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் மோதிலால் நேரு கல்லூரியில் படிப்பை தொடங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது வீடு இருக்கும் அதே பகுதியில் நண்பரின் போட்டோ கடைக்கு சென்ற மோஹிட், அங்கு நண்பரும் பேசிக்கொண்டிருந்துள்ளார். 

அப்போது அங்கு வந்து 3 மர்ம நபர்கள், மோஹிட்டை சரமாரியாக சுட்டுள்ளனர். அவர்களால் சுடப்பட்ட 13 குண்டுகளில் 7 குண்டுகள் மோஹிட் உடலில் பாய்ந்தது. பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மோஹிட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com