\
கொலை மிரட்டல்: சகோதரி மீது ’டிக்டாக்’ சோனாலி புகார்!

கொலை மிரட்டல்: சகோதரி மீது ’டிக்டாக்’ சோனாலி புகார்!

கொலை மிரட்டல்: சகோதரி மீது ’டிக்டாக்’ சோனாலி புகார்!
Published on

ஹரியானா டிக்டாக் பிரபலமும் அம்மாநிலத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவருமான சோனாலி போகத், தன்னைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாக, தனது சகோதரி மற்றும் மைத்துனர் மீது புகார் கொடுத்துள்ளார்.

டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் ஹரியானாவைச் சேர்ந்த சோனாலி. இவரது பிரபலத்தை வைத்து ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, இவருக்கு சீட் வழங்கியது. ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்ட இவர், தோல்வி அடைந் தார்.

இந்நிலையில் தனது சொந்த ஊரான புந்தன்கலன் கிராமத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சோனாலி சென்றார். அங்கு அவரது சகோதரி ருகேஷூம் மைத்துனர் அமன் புனியாவும் இருந்தனர். சோனாலியை காண உள்ளூர் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

இந்நிலையில், வீட்டில் சகோதரி ருகேஷுக்கும் சோனாலிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு சண்டையாக மாறியது. இதையடுத்து, தன்னைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக சர்தார் போலீசில் சோனாலி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com