உயிரியல் பூங்காவில் உயிரிழந்த பெண் புலி ! - கொரோனா பாதிப்பா ?

உயிரியல் பூங்காவில் உயிரிழந்த பெண் புலி ! - கொரோனா பாதிப்பா ?
உயிரியல் பூங்காவில் உயிரிழந்த பெண் புலி ! - கொரோனா பாதிப்பா ?

டெல்லி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 14 வயதான பெண் புலி இன்று உயிரிழந்ததையடுத்து, அதன் ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 23.400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 723 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை மனிதர்களிடையே மட்டும் பரவி வந்த கொரோனா இப்போது விலங்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் சாட்சியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது பிரபல பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 4 புலிகளுக்கும் 3 சிங்கங்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு உயிரியல் பூங்காவில் இருக்கும் உயிரினங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்து 14 வயதான கல்பனா என்ற பெண் புலி திடீரென உயிரிழந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உயிரியல் பூங்கா அதிகாரி " கல்பனா என்ற பெண் புலி சிறுநீரக கோளாறு காரணமாகப் புதன்கிழமை உயிரிழந்தது. பின்பு, அந்தப் புலியின் உடல் மறுநாள் தகனம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக பெண் புலியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெரேலியில் உள்ள கொரோனா சோதனைக் கூடத்துக்கு அனுப்பியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com