பைக்கை மின்னல் வேகத்தில் துரத்திய புலி - வைரல் வீடியோ
கேரளாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக்கை புலி ஒன்று மின்னல் வேகத்தில் துரத்திய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
வயநாட்டில் உள்ள முத்தங்க வனவிலங்கு சரணாலயத்தில் இருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கில் சென்றவர்களுள் ஒருவர் தங்களை ஒரு புலி துரத்தி வருவதை பார்த்துள்ளார். அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சில நொடிகளே அந்தப் புலி அவர்களை துரத்திக் கொண்டு வந்தது. அதற்குள் மின்னல் வேகத்தில் சாலையை கடந்து மற்றொரு புறம் உள்ள புதருக்குள் சென்றுவிட்டது. அப்படியே பின்னர் காட்டிற்குள் சென்று புலி மறைந்தது. சில நொடிகளே சாலையில் அந்தப் புலி பாய்ந்து வந்த காட்சியை பைக்கில் சென்றவர்களே தங்களது போன் காமிராவில் பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோ காடுகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு சார்பில் இயங்கும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.