\
எப்படியெல்லாம் பெயர் வைக்கிறார்கள்? வைரலான உணவுக்கடை போட்டோ!

எப்படியெல்லாம் பெயர் வைக்கிறார்கள்? வைரலான உணவுக்கடை போட்டோ!

எப்படியெல்லாம் பெயர் வைக்கிறார்கள்? வைரலான உணவுக்கடை போட்டோ!
Published on

வித்தியாசமான பெயர்களில் இருக்கும் கடைகள் மற்றும் வாகனங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையங்களில் பரவி வைரலாவதுண்டு. அந்தவகையில் ஒடிசாவின் ஒரு டிஃபன் கடை அதன் பெயரால் பிரபலமாகி வருகிறது.

ஒடிசாவின் பெர்ஹாம்பூரின் காந்திநகர் மெயின் ரோடில் அமைந்துள்ளது ஆன்டிவைரஸ் டிஃபன் சென்டர். ஒரு ரெடிட் பயனர் இந்தக் கடையின் புகைப்படத்தை தனது பக்கத்தில் பகிர்ந்ததிலிருந்து மிகவும் வைரலாகி வருகிறது.

இந்தக் கடையின்முன்பு அங்கு என்னென்ன உணவுப்பொருட்கள் கிடைக்கும் என்ற போர்டும் வைக்கப்பட்டுள்ளது. இட்லி, தோசை, சமோசா, உப்மா, வடை, பூரி மற்றும் பகோடா ஆகியவை இங்கு கிடைக்கிறது. மேலும் அங்கு அமர்ந்து சாப்பிடும் வசதிகள் இல்லாததால் பலர் கடைமுன்பு நின்று சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த போஸ்ட் குறித்து நெட்டிசன்கள் மிகவும் ஆச்சர்யமடையவில்லை என்றாலும், இதுகுறித்து ’’அந்த உணவில் அவர் சானிடைசர் கலந்திருக்க மாட்டார் என நம்புகிறேன்’’, ‘’ஏன் ஒருவர்கூட மாஸ்க் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கின்றனர்?’’ என்பது போன்ற தங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com