மார்ச் 25 – மே 3 தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட விமான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் !

மார்ச் 25 – மே 3 தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட விமான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் !
மார்ச் 25 – மே 3 தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட விமான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் !

கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை உள்நாடு மற்றும் சர்வதேச விமான டிக்கெட் புக்கிங் செய்த அனைவருக்கும் கட்டண தொகை முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொது முடக்கம் சமயத்தில் டிக்கெட் கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டண தொகையும் திருப்பி அளிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட காலத்திற்குண்டான டிக்கெட் பணத்தை விமான நிறுவனங்கள் திருப்பி அளிக்காவிட்டால், அது விதிமீறலாக கருதி, அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com