3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : காஷ்மீரில் மக்கள் நீதிப்போராட்டம்

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : காஷ்மீரில் மக்கள் நீதிப்போராட்டம்

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : காஷ்மீரில் மக்கள் நீதிப்போராட்டம்
Published on

3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி காஷ்மீரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காஷ்மீரில் 3 வயது சிறுமியை தஹிர் அஷ்ரஃப் மிர் என்ற கொடூரன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக புகைப்படங்களும், சிறுமி கண்ணில் ரத்தக்காயங்களுடனும் இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து குற்றவாளி தஹிர் கைது செய்யப்பட்டார். ஆனால் 27 வயது நிரம்பிய அந்த கொடூரனின் வயதை குறைத்து, அவனுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை தடுக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சிறுமிக்கு நீதி வேண்டும் என மக்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் நீதி வேண்டும் என கோரிக்கைகளை விடுத்து வைரலாக்கியுள்ளனர். 6 மாதம், 3 வயது, 8 வயது என இன்னும் எத்தனை குழந்தைகளை பலியாக்கப்போகின்றீர்கள் என சிலர் கேட்டுள்ளனர். இவ்வாறு பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்காமல், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது என சிலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com