\
காங்கிரஸ் ஆட்சியில் 3 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள்:  முன்னாள் மத்திய அமைச்சர்

காங்கிரஸ் ஆட்சியில் 3 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள்: முன்னாள் மத்திய அமைச்சர்

காங்கிரஸ் ஆட்சியில் 3 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள்: முன்னாள் மத்திய அமைச்சர்
Published on

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 3 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குள் நடத்தப்பட்டதாக முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மகராஷ்ட்ரா மாநிலத்தின் ஒஸ்மானாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் கடந்த 2009-2013ம் ஆண்டுகளில் 3 முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் நடத்தப்பட்டன. ஆனால், விளம்பரத்துக்காக அதுகுறித்த தகவல் வெளியில் சொல்லப்படவில்லை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ராணுவ நடவடிக்கைகள் மூலம் மக்களிடம் பெயர் வாங்க முயற்சிக்கிறது. வாக்குறுதிகளை அள்ளிவீசுவதன் மூலம் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயலுவதாகவும் குற்றம்சாட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com