உச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி

உச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி

உச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி
Published on

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீர் சரண் மற்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோரை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் சமீபத்தில் பரிந்துரை செய்தது. கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.

இதனையடுத்து நாளை மறுநாள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்திரா பானர்ஜி நியமனத்தால் உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com