\
இந்தியாவில் மீண்டும் தரையிறங்கும் 3 புதிய ரஃபேல் விமானங்கள்!

இந்தியாவில் மீண்டும் தரையிறங்கும் 3 புதிய ரஃபேல் விமானங்கள்!

இந்தியாவில் மீண்டும் தரையிறங்கும் 3 புதிய ரஃபேல் விமானங்கள்!
Published on: 

இரண்டாம் கட்டமாக இன்று மீண்டும் புதிய ரஃபேல் விமானங்கள் இந்தியா வரவுள்ளன.

இந்திய விமானப்படையை மேம்படுத்தும் திட்டத்தில் முதல் கட்டமாக ஜூலை 28ஆம் தேதி 5 புதியரக ரஃபேல் விமானங்கள் இந்தியாவை வந்தடைந்தது. அது பிரதமர் நரேந்திர மோடியால் செப்டம்பர் 10-ஆம் தேதி துவக்கிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்று மாலை 3 புதிய ரஃபேல் விமானங்கள் இந்தியாவை வந்தடையவுள்ளது. அவை ஹரியானாவில் உள்ள அம்பலா விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் இந்திய விமானப்படையில் மொத்தம் 8 ரஃபேல் விமானங்கள் சேரவுள்ளன. இந்த மூன்று புதிய விமானங்களும் சூழ்நிலையைப் பொருத்து சில நாட்களில் இயக்கப்படவுள்ளதாக அரசு அதிகாரிகள் இந்தியா டுடேவிற்கு கொடுத்த தகவலில் தெரிவித்துள்ளனர். முன்பு வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்கள் இந்தியப்படைக்கு வந்த குறுகிய காலத்திலேயே லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com