திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர்

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த மூவருக்கு ஆந்திர மாநில அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.
Trustees
TrusteesPT Desk

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக ஏற்கெனவே கருணாகர ரெட்டி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார். மீதமுள்ள உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிசீலனை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 24 பேரை உறுப்பினர்களாக நியமித்துள்ளனர். அதில் தமிழகத்தின் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சங்கர், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் உள்பட 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tirupathi
Tirupathipt desk

இதில், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் அமித்ஷா தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார். டாக்டர் சங்கர், நிர்மலா சீதாராமன் தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இரண்டாவது முறையாக தொடர்ந்து பதவியேற்க உள்ளார். திருப்பூர் பாலசுப்ரமணியம் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com