\
கரும்புத் தோட்டத்திற்குள் சிறுத்தைக் குட்டிகள்!

கரும்புத் தோட்டத்திற்குள் சிறுத்தைக் குட்டிகள்!

கரும்புத் தோட்டத்திற்குள் சிறுத்தைக் குட்டிகள்!
Published on: 

மகாராஷ்டிராவில் கரும்புத் தோட்டத்திற்குள் இருந்த சிறுத்தைக் குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர். 

ஷிரூர் மாவட்டத்தில் நாகர்கான் என்ற மலையடிவார கிராமத்தில், கரும்புத் தோட்டத்தில் தொழிலாளர்கள் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தோட்டத்தின் மையப்பகுதியை அடைந்தபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு 3 சிறுத்தைக் குட்டிகள் இருந்தன. தகவலறிந்து வந்த வனத்துறையினர், அந்தக் குட்டிகளை மீட்டு தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்தனர். சில‌ மணி நேரத்திற்கு பிறகு குட்டிகளைத் தேடி தாய் சிறுத்தை வந்தது. அப்போது குட்டிகள், தாய் நடமாடிய பகுதியில் பத்திரமாக விடப்பட்டன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com