வீட்டில் தயாரித்த டீ குடித்து 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி: உ.பி நிகழ்வின் பின்னணி என்ன?

வீட்டில் தயாரித்த டீ குடித்து 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி: உ.பி நிகழ்வின் பின்னணி என்ன?

வீட்டில் தயாரித்த டீ குடித்து 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி: உ.பி நிகழ்வின் பின்னணி என்ன?

வீட்டில் தயாரித்த டீயை குடித்த நிலையில், 2 குழந்தைகள் உட்பட முதியவர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறி இருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் மெயின்புரியை அடுத்த நாக்லா கன்ஹாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் இறந்தவர்கள். ஷிவாநந்தன், அவரது மகன் ஷிவாங் (6), திவ்யான்ஸ் (5), மாமனார் ரவிந்த்ர சிங் (55) மற்றும் அண்டைவீட்டைச் சேர்ந்த சோப்ரன் ஆகியோர் Bhai Dooj என்ற நிகழ்வுக்காக ஒன்று கூடியிருக்கிறார்கள்.

அப்போது ஷிவாநந்தனின் மனைவி ரமாமூர்த்தி வீட்டில் டீ போட்டு கொடுத்திருக்கிறார்கள். டீயை குடித்த பிறகு முதலில் ரவிந்த்ர சிங் நிலைக்குலைந்து விழ ஒவ்வொருவராக சரிந்து விழுந்திருக்கிறார்கள். இதனையடுத்து உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

அங்கு ரவிந்த்ர சிங். ஷிவாங் (6) மற்றும் திவ்யான்ஷ் (5) ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் எஞ்சிய இருவரும் உயிருக்கு ஆபத்தான இருப்பதால் உடனடியாக சைஃபாய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கமலேஷ் தீக்சித் விசாரணையை தொடங்கியிருக்கிறார். அதன்படி, ஷிவாநந்தனின் மனைவி ரமாமூர்த்திதான் டீ தயாரித்து அனைவருக்கும் கொடுத்திருக்கிறார். செடிகளில் இருக்கும் பூச்சிகளை கொல்லும் மருந்து தவறுதலாக டீயில் கலந்துவிட்டதால் இப்படியான சோக நிகழ்வு அரங்கேறியிருக்கிறது என தெரிய வந்திருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com