\
'ஜெய் ஸ்ரீராம்’ சர்ச்சை:  இஸ்லாமிய இளைஞர்கள் மீது தாக்குதல்?

'ஜெய் ஸ்ரீராம்’ சர்ச்சை: இஸ்லாமிய இளைஞர்கள் மீது தாக்குதல்?

'ஜெய் ஸ்ரீராம்’ சர்ச்சை: இஸ்லாமிய இளைஞர்கள் மீது தாக்குதல்?
Published on

குஜராத்தில் ஜெய் ஸ்ரீராம் என சொல்ல மறுத்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்த மெக்கானிக் கடை வைத்திருக்கும் சித்திக் பகத் என்பவர் போலீசில் புகார் ஒன்றினை  கொடுத்துள்ளார்.  அந்தப் புகாரில், “பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் தனது மகன் சமீர் (17), சல்மான் கீதேலி, சோஹைல் பகத் ஆகியோர் மோட்டார் பைக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு மோட்டார் பைக்கில் வந்த 6 பேர், இவர்களை நிறுத்தி, ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போடும்படி கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், பைக் செயின் மற்றும் பயங்கர ஆயுதங்களால் மண்டையில் சரமாரியாகத் தாக்கினர்.

பின்னர்  கொலை மிரட்டல் விட்டுவிட்டு சென்றுள்ளனர். படுகாயம் அடைந்து கிடந்த அவர்களை அந்தப் பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று  தெரிவித்துள்ளார்.

இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ள கோத்ரா போலீசார், ‘’பாதிக்கப்பட்டவர்கள், பேசும் நிலையில் இப்போது இல்லாததால் மேலதிக விவரங்கள் கிடைக்கவில்லை. இருந்தாலும் சிசிடிவி காட்சிகளை பார்த்து 5 பேரை கைதுசெய்துள்ளோம். ஒருவரை தேடி வருகிறோம். அனைவரும் 17 வயதில் இருந்து 23 வயதுக்குள்ளவர்கள். இருசக்கர வாகனத்தை ஓவர் டேக் செய்யும் போது ஏற்பட்ட பிரச்னையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது’’ என்று தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com