\
சிங்கத்தை பைக்கில் துரத்திய இளைஞர்கள் கைது!

சிங்கத்தை பைக்கில் துரத்திய இளைஞர்கள் கைது!

சிங்கத்தை பைக்கில் துரத்திய இளைஞர்கள் கைது!
Published on

வனப்பகுதிக்குள் சிங்கங்களை பைக்கில் துரத்திய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் சிங்கங்கள் அதிகம் வசிக்கும் கிர் வனப் பகுதிக்குள் இரண்டு இரு சக்கர வாகனங்களில் சென்ற 3 இளைஞர்கள், அங்கிருந்த சிங்கங்களை துரத்திச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. சிங்கத்தை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி, அந்த இளைஞர்கள் துரத்திச் சென்றுள்ளனர். 

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, அந்த‌ மூன்று இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com