ராமர் கோயிலுக்கு நன்கொடை கேட்டு அச்சுறுத்தப்பட்டேன்: எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டு

ராமர் கோயிலுக்கு நன்கொடை கேட்டு அச்சுறுத்தப்பட்டேன்: எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டு
ராமர் கோயிலுக்கு நன்கொடை கேட்டு அச்சுறுத்தப்பட்டேன்: எச்.டி. குமாரசாமி குற்றச்சாட்டு

ராமர் கோயில் கட்ட நன்கொடை பெற வந்தவர்களால் அச்சுறுத்தப்பட்டேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நாஜிக்களுடன் ஒப்பிட்ட தனது கருத்துகளால் பரபரப்பை ஏற்படுத்திய எச்.டி. குமாரசாமி இன்று புதிய குற்றச்சாட்டை எழுப்பினார். ராமர் கோயில் நன்கொடைகளுக்காக தன்னிடம் வந்த நபர்களால் "அச்சுறுத்தப்பட்டேன்" என்று குற்றம்சாட்டினார். ராமர் கோயில் நன்கொடை இயக்கத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லை என்றும் குற்றம் சாட்டிய குமாரசாமி, "நானும் ஒரு பாதிக்கப்பட்டவன்" என்றார்.

நன்கொடைகள் பெற 15 நாட்களுக்கு முன்பு ஒரு குழு தன்னை சந்தித்து மிரட்டியதாக அவர் கூறினார். மக்களும் ராமர் கோயிலுக்கு நன்கொடை கேட்டு மிரட்டப்படுகிறார்கள். ராமர் கோயிலுக்கு நன்கொடை அளித்தவர்களையும், அளிக்காதவர்களையும் குறிக்க வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது குறித்து தெளிவுபடுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இது நாஜிக்கள் செய்ததைப் போன்றது என்றும், ஜெர்மனியில் நாஜி கட்சி நிறுவப்பட்ட நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் பிறந்தது என்றும் கூறினார்.

ராமரின் பெயரில், அங்கீகரிக்கப்படாத நபர்கள் பணம் சேகரிக்கின்றனர். அவர்களுக்கு யார் அங்கீகாரம் அளித்துள்ளனர்? யார் இதற்குக் கணக்குக் கொடுக்கப் போகிறார்கள்? யார் நன்கொடை தருகிறார்கள். யார் கொடுக்கவில்லை? என்று குறிக்கும் பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இது ஏன் நடக்கிறது? என்ன நோக்கம்? " என்றும் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com