இந்தியா
"இந்தியாவுக்கான அபாயம் குறைந்துள்ளது; நீங்கிவிடவில்லை" - ராணுவத் தளபதி
"இந்தியாவுக்கான அபாயம் குறைந்துள்ளது; நீங்கிவிடவில்லை" - ராணுவத் தளபதி
கிழக்கு லடாக்கில் சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் விலக்கிக்கொள்ளப்பட்டதால் இந்தியாவுக்கான அபாயம் குறைந்துவிட்டாலும் முற்றிலும் நீங்கிவிடவில்லை என ராணுவத் தளபதி எம் என் நரவானே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், கிழக்கு லடாக்கில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இன்னமும் சீனப் படைகள் இருக்கின்றன எனச் சொல்வது தவறானது என குறிப்பிடார். இன்னமும் இரு தரப்பிலும் பதற்றம் தணியவில்லை எனக் குறிப்பிட்ட ராணுவ தளபதி எதிர்பாராத மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்.