''மரத்தை தொட்டால் நோய்கள் தீரும் என பரவிய செய்தி'' - காட்டுக்குள் படையெடுக்கும் மக்கள்!

''மரத்தை தொட்டால் நோய்கள் தீரும் என பரவிய செய்தி'' - காட்டுக்குள் படையெடுக்கும் மக்கள்!

''மரத்தை தொட்டால் நோய்கள் தீரும் என பரவிய செய்தி'' - காட்டுக்குள் படையெடுக்கும் மக்கள்!
Published on

காட்டுக்குள் உள்ள இலுப்பை மரத்தை தொட்டால் நோய்கள் எல்லாம் சரியாகும் என பரவிய செய்தியால் ஏராளமான மக்கள் காட்டுக்குள் குவிந்து வருகின்றனர். மக்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது சாத்பூரா மலைத்தொடர். இந்தக் காட்டுப்பகுதியில் புலிகள், இந்தியக் காட்டெருது, செந்நாய், மான் போன்ற விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மக்களிடையே பரவிய செய்தி ஒன்றால் சாத்பூரா காட்டுப்பகுதிக்கு பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சாத்பூரா மலைத்தொடரில் உள்ள ஒரு இலுப்பை மரத்தை தொட்டால் நோய்கள் சரியாவாதாக செய்தி ஒன்று காட்டுத்தீ போல பரவியது. இதனை அடுத்து பொதுமக்கள் அந்த இலுப்பை மரத்தை தேடி வரத்தொடங்கினர். நாளுக்கு நாள் மக்களின் கூட்டம் அதிகரிக்கவே செய்வதறியாமல் போலீசார் விழி பிதுங்கியுள்ளனர். இது குறித்து பேசியுள்ள போலீசார் ஒருவர், எங்களது கணக்குப்படி கிட்டத்தட்ட 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காட்டுக்குள் வந்து சென்றுள்ளனர். 

மக்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் மக்களின் வருகை அதிகரிக்கிறது. பல்வேறு கிராமங்களில் இருந்தும் நகரங்களில் இருந்து பொதுமக்கள் வருவதால் பிபாரியா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் எல்லாம் அமைத்துள்ளோம். ஆனால் அவையெல்லாம் கூட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள சாத்பூரா மலைத்தொடரின் கள இயக்குனர் எஸ்கே சிங்க், இலுப்பை மரம் நகரப்பகுதிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ளதால் வன விலங்குகளுக்கு மக்களால் தொல்லை இல்லை. ஆனாலும் இது எதிர்காலத்தில் சிக்கலை உண்டாக்கும். பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் வன விலங்குகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மக்களை வலுக்கட்டாயமகவே வெளியேற்ற வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com