அமித்ஷா
அமித்ஷாமுகநூல்

’ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் சூழல் உருவாகும்’ ~ அமித் ஷாவின் பேச்சும் எதிர்வினையும்..!

” நம் நாட்டை பற்றி புரிந்து கொள்ள, நம் கலாச்சாரம், நம் வரலாறு, நம் மதங்கள் பற்றி அறிந்து கொள்ள எந்த ஒரு அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது.” - அமித்ஷா
Published on

நம் நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அதற்காக வெட்கப்படும் காலம் வரும், நம் தாய் மொழிகளே தேசிய அடையாளம், அந்நிய மொழிகளை பேசுவதை காட்டிலும் நம் தாய் மொழிகளை பேசுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

“தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது” - அமித்ஷா
“தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படாது” - அமித்ஷா

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா என ஆகிய மாநிலங்கள் தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில், இந்தி திணிப்பை மத்திய அரசு கையில் எடுத்திருப்பதாக, தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இந்தநிலையில், மொழி குறித்தான கருத்து ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைத்துள்ளார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஷிதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய 'Main Boond Swayam, Khud Sagar Hoon' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுகுறித்த விஷயங்களை பேசியிருக்கிறார்.

அதில், " நம் நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் காலம் வரும். அதுபோல, ஒரு இந்திய சமூகம் உருவாவது வெகு தொலைவில் இல்லை. உறுதியுடன் இருப்பவர்களாலேயே மாற்றத்தை கொண்டுவர முடியும். இந்த நாட்டின் மொழிகளே நமது கலாச்சாரத்தின் ஆபரணங்கள் என நான் நம்புகிறேன். நம்முடைய மொழிகள் இல்லாமல் நாம் முழுமையான இந்தியனாக ஆகிவிட முடியாது.

அமித்ஷா
HEADLINES|இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் முதல் கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் விட்ட தயாநிதி வரை

நம் நாட்டை பற்றி புரிந்து கொள்ள, நம் கலாச்சாரம், நம் வரலாறு, நம் மதங்கள் பற்றி அறிந்து கொள்ள எந்த ஒரு அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. முழுமையான இந்தியாவைப் பற்றி அறிய அரைவேக்காட்டான அந்நிய மொழிகள் உதவாது. இந்த போராட்டம் மிகவும் கடினமானது என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் இந்திய சமூகம் இதில் வெற்றி பெறும் என நான் மனதார நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், “ ஆங்கிலம் கற்று வெளிநாடுகளில் குடியேறி அதிகாரம் செய்பவர்களுக்கும் இது பொருந்துமா? இல்லை, எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என முயற்சிக்கும் ஏழைகளை குறிவைத்தா?

பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்திலேயே அதிகாரத்தை கைப்பற்ற ஆங்கிலம் கற்று ஆங்கிலேயருக்கு கைக்கூலிகளாக செயல்பட்டு சமூகத்தில் பின்தங்கிய மக்களை ஒடுக்கி அவர்கள் உழைப்பை சுரண்டி வாழ்ந்த கூட்டம், இப்போது உழைக்கும் மக்களும் ஆங்கிலம் கற்று உயர்வது கண்டு பொறுக்க முடியாமல் பேசுவதை எண்ணி வேதனை படத்தான் முடிகிறது.

இனத்தை காக்க தாய்மொழி கற்போம். பொருளாதாரம் மேம்பட்டு அதிகாரத்தை கைப்பற்ற ஆங்கிலம் கற்போம்.

நம்மை ஏமாற்றும் கூட்டத்திடம் விழிப்பாயிருப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

எம்.பி. சு.வெங்கடேசன்

“ ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு அவ்விடத்தில் இந்தியை உட்கார வைக்க கடந்த 75 ஆண்டுகளாக இந்தி வெறியர்கள் எத்தனையோ வசனங்களைப் பேசிப்பார்த்துவிட்டனர்.

அதில் அரதப் பழசான வசனம்தான் இன்று அமித்ஷா பேசியுள்ளது.

புதுசா ஏதாவது யோசிங்க சார்!” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com