‘தேசத்திற்கு எதிராக முழக்கமிடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் : அமித்ஷா

‘தேசத்திற்கு எதிராக முழக்கமிடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் : அமித்ஷா
‘தேசத்திற்கு எதிராக முழக்கமிடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் : அமித்ஷா

இந்தியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்புபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, “சில மாணவர்கள் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை கூறியுள்ளார்கள். 'Bharat tere tukde honge ek hazar, inshallah, inshallah''(நாட்டை உடைத்துவிடுவோம்) என்பது போன்று அவர்கள் முழக்கமிடுகிறார்கள். அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டாமா?.

ஆனால், அவர்களை காப்பாற்ற வேண்டுமென ராகுல் மற்றும் கெஜ்ரிவால் கூறுகின்றனர். அவர்கள் என்ன உங்களது சகோதரர்களா? தேசத்திற்கு எதிராக முழக்கமிடுபவர்கள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார். இருப்பினும், எப்போது இந்த முழக்கங்கள் எழுப்பப்பட்டது என்று அவர் குறிப்பிடவில்லை.

சிஏஏ நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர் முதன் முறையாக இத்தகைய கருத்தினை அமித்ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com