’தந்தை பெரியாருக்கும் பாரத ரத்னா வழங்க வேண்டும்’ - நாடாளுமன்றத்தில் எம்பி திருமாவளவன் கோரிக்கை!

’வி.பி.சிங், தந்தை பெரியார், கான்சிராம் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன் மக்களவையில் கோரிக்கை வைத்தார்.
பெரியார், திருமா
பெரியார், திருமாட்விட்டர்

மத்திய பாஜக அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மக்களவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று தமிழக எம்பிக்கள் பேசிவருவதுடன் மத்திய அரசுமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல்.திருமாவளவன், “மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டு, மாநில அரசுகளுடன் கலந்துபேசி மாற்று வகையிலான வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். 16வது நிதிக்குழுவில் மாநில அரசுகளுக்கு நேர்மையான முறையில் நிதியைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். குறிப்பாக, மாநில அரசுகள் தங்களின் தற்சார்பை இழந்திருக்கும் நிலையில், 75% வரி வருவாயில் நிதியைப் பகிர்ந்து அளிப்பதற்கு ஏற்ற வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்க: 3 ஆண்டுகளில் அசாம் முதல்வர், அமைச்சர்களின் சொந்த நிகழ்வுகளுக்கு மட்டும் விமானச்செலவு ’58.23 கோடி’!

வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகை சீட்டு 100% இணைக்கப்பட வேண்டும். அதனை எண்ணி முடித்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மிக முக்கியமானதாகும். அதை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். ’ஒரே நாடு.. ஒரே கலாசாரம்.. ஒரே மொழி.. ஒரே மதம்..’ என்கிற கொள்கைகளை முழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் இந்திய இன்றைய ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது.

ஆனால், எதிர்க்கட்சிகள் நாட்டைப் பிளவுபடுத்துவதாக குற்றம்சுமத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. கடைசியாக ஒரேயொரு வேண்டுகோள். தாகூருக்கு (பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூர்) பாரத ரத்னா விருது வழங்கியதை நான் வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன். அதேபோல சமூகநீதி காவலராக தமது வாழ்வை ஒப்படைத்துக்கொண்ட வி.பி.சிங்கிற்கும் தந்தை பெரியாருக்கும் கான்சிராமுக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும்” என அவர் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிக்க: மீண்டும் 100 பில்லியன் டாலரைத் தாண்டிய சொத்து மதிப்பு: ஒரேவருடத்தில் சரிவை மீட்ட கெளதம் அதானி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com