முடிந்தது எல் நினோ! இந்த வருடம் மழைப்பொழிவு எப்படி? இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஹேப்பி நியூஸ்!

இந்தியாவில், நடப்பு ஆண்டிற்கான பருவமழையானது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம்முகநூல்

கடந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு, எல் - நினோ ஆண்டாக அமைந்தததால் தென்மேற்குப்பருவமழை வழக்கத்தினைவிட குறைவாக பெய்தது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல் நினோ

மத்திய பசிபிக் பெருங்கடலில் மேற்கு பரப்பில் உள்ள நீர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சராசரியை விட அதிகமாக வெப்பமடைவதால் எல் நினோ நிகழ்வு ஏற்படுகிறது.

லா நினா

பசிபிக் பெருங்கடலில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த வெப்பநிலையால் வகைப்படுத்தப்படும் காலநிலை நிகழ்வு தான் லா நினா.

இந்திய வானிலை ஆய்வு மையம்

1951 - 2023 ஆம் ஆண்டு காணப்படும் தரவுகளின் அடிப்படையில், எல் - நினோ நிகழ்வைத் தொடர்ந்து 9 முறை லா நினா நிகழ்வைத் தொடர்ந்துள்ளது. இந்த லா நினா காலங்களில் இந்தியாவில், தென்மேற்கு பருவமழையின் அளவு என்பது சராசரி அளவைவிட அதிகமான பெய்துள்ளது என்று தெரிவிக்கிறது.

இந்தவகையில், மத்திய பசிபிக் பெருங்கடலில் மேற்கு பரப்பில் உள்ள நீர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சராசரியை விட அதிகமாக வெப்பமடைவதால் ஏற்படும் எல் நினோ நிகழ்வு என்பது தற்போது வலு குறைந்து காணப்படுவதால் பருவமழையின் தொடக்கத்தில் எல்நினோ முற்றிலும் மறைய வாய்ப்பு உள்ளது.

இதனையடுத்து, லா நினோ நிகழ்வுதோன்றும் என்பதால் ஜூன் - செப்டம்பர் வரையிலான நான்கு மாத பருவ மழைக்காலத்தில் இயல்பைவிட அதிகமாக மழைப்பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் படி, நீண்ட கால சராசரி மழைப்பொழிவைவிட (87 செ.மீ) அதிகமாக 106 செமீ பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்
“அன்பான மனிதன் ராகுல் அண்ணா மீது அவதூறு பரப்புவது மன வருத்தத்தை தருகிறது” - Village Cooking Channel

ஆனால் உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் மட்டும் குறைந்த அளவு மழைப்பொழிவு இருக்கும் எனவும், பருவமழைக்கான தகவல்கள் மே கடைசி வாரத்தில் வெளியிடப்படும் போன்ற கூடுதல் தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com