\
இந்த வெற்றி பிரதமர் மீதான நம்பிக்கையின் பிரதிபலிப்பு: பாஜக தலைவர்கள் கருத்து

இந்த வெற்றி பிரதமர் மீதான நம்பிக்கையின் பிரதிபலிப்பு: பாஜக தலைவர்கள் கருத்து

இந்த வெற்றி பிரதமர் மீதான நம்பிக்கையின் பிரதிபலிப்பு: பாஜக தலைவர்கள் கருத்து
Published on

மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பிரதமர் மோடி மீதான நம்பிக்கை காரணமாக குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல்களில் வாக்காளர்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளனர் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றியாகவே இதை பார்ப்பதாக கூறியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் மேஜிக் இந்தத் தேர்தலில் பிரதிபலித்திருப்பதாக சாக்ஷி மகாராஜ் போன்ற தலைவர்கள் கருத்து வெளியிட்டு‌ள்ளனர்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றப் பின் அவருக்கு கிடைத்த முதல் தோல்வி இது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் ராகுலின் செல்வாக்கு வாக்காளர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றும் கூறியுள்ளார். பச்சோந்தியை போல ராகுல் அவ்வப்போது தனது நிறத்தை மாற்றிக் கொண்டதாகவும், அதன் காரணமாகவே குஜராத் கோயிலுக்கு சென்று வாக்கு சேகரித்தார் என்றும் கிரிராஜ் சிங் காட்டமாக குற்றம்சாட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com