டீ விற்று ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் நவ்நாத்: புனேயில் ஓர் ஆச்சரிய வியாபாரி!

டீ விற்று ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் நவ்நாத்: புனேயில் ஓர் ஆச்சரிய வியாபாரி!
டீ விற்று ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் நவ்நாத்: புனேயில் ஓர் ஆச்சரிய வியாபாரி!

சாதாரண ஒரு டீ கடைக்காரரால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் என்ன நினைத்தாலும் அதைப் பொய்யாக்கி இருக்கிறார், புனேவைச் சேர்ந்த டீ கடைக்காரர் ஒருவர். அவர் சம்பாதிப்பது, ஜஸ்ட் 12 லட்சம் ரூபாய்தான்! 

புனே நகரின் அடையாளமாக மாறி இருக்கிறது, ’யவ்லே டீ ஹவுஸ்’ (Yewle Tea house). நல்ல டீ குடிப்பவர்கள் தேடி வரும் இடம். தினமும் ஏராளமானோர் விரும்பி டீ குடிக்கும் கடையாக இது மாற, அடுத்தடுத்து கிளைகளையும் தொடங்கி இருக்கிறார்கள். ’டீ சூப்பரா இருக்கே’ என்று டாக் பரவ, கடையெல்லாம் கூட்டம், கல்லாவெல்லாம் காசு, பணம், துட்டு! 

டாக் ஆப் த டவுன் ஆகியிருக்கும் இந்தக் கடையின் இணை நிறுவனர் நவ்நாத் யெவ்லே-விடம் கேட்டால், ‘சும்மா இல்ல சார், 4 வருட ஆய்வு இது’ என்கிறார். ’டீ கடை போட நாலு வருட ஆய்வா? என்று ஆச்சரியப்பட்டால், ‘ஆமா, சும்மா வந்திருமா எதுவும்?’ என கேள்வி கேட்கிறார்.

‘மகாராஷ்ட்ரா மட்டுமில்ல, இந்தியா முழுவதும் டீ குடிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. அதனாலதான் நிறைய டீ கடைகள் பெருகி இருக்கு. ஆனா, நல்ல டீ குடிக்கிறாங்களான்னா, இல்லைங்கற பதில்தான் வரும். அதனால ஒரு நாலு வருஷம் ஸ்டடி பண்ணினோம். இப்படி இப்படி பண்ணினா, வியாபாரம் சூப்பரா போகும்னு நினைச்சோம். அதன்படி ஆரம்பிச்சதுதான் ’யெவ்லே டீ ஹவுஸ்’. இப்ப மூணு பிராஞ்ச் இருக்கு எங்களுக்கு. ஒரு கடையில 12 பேர் வேலை பார்க்கிறாங்க. தினமும் மூவாயிரம், நாலாயிரம் டீ விற்குது. பிரமாதமா போகுது’ என்கிற நவ்நாத், இன்னும் பல கிளைகளை திறக்க இருக்கிறாராம்.

’நிறைய பேருக்கு வேலை கொடுத்த மாதிரியும் இருக்கும். நாம காசு சம்பாதிச்ச மாதிரியும் இருக்கும்’ என்று சிரிக்கிறார் இந்த நாத்!


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com