‘கடந்த ஆண்டு மினி பட்ஜெட்களின் அடுத்த சீரிஸ்...’ - பிரதமர் மோடி

‘கடந்த ஆண்டு மினி பட்ஜெட்களின் அடுத்த சீரிஸ்...’ - பிரதமர் மோடி
‘கடந்த ஆண்டு மினி பட்ஜெட்களின் அடுத்த சீரிஸ்...’ - பிரதமர் மோடி
Published on

2020-ம் ஆண்டில் 4-5 மினி பட்ஜெட்கள் வழங்க வேண்டி இருந்தது. எனவே, இந்த பட்ஜெட் அந்த 4-5 மினி பட்ஜெட்டுகளின் ஒரு பகுதியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

2021-ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்துள்ளன.

2021-2022-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், கூட்டத் தொடரில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ''இன்று இந்த தசாப்தத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு, இந்த தசாப்தம் மிகவும் முக்கியமானது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்ற தேசத்தின் முன் ஒரு பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது. இந்த தசாப்தம் முழுவதையும் நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை மனதில் வைத்து, இந்த அமர்வில் அடுத்த 10 ஆண்டுகளை மையமாகக் கொண்ட விவாதங்கள் இருக்க வேண்டும். இதுதான் தேசத்தால் எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.

தொடர்ந்து பேசியவர், ''2020-ம் ஆண்டில் 4-5 மினி பட்ஜெட்களாக பொருளாதார நிதித் தொகுப்புகளை நாட்டு மக்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அர்ப்பணித்தார். அதன் ஒருபகுதியாகத் தான் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டும் இருக்கும் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com