குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது ஏன்?: பெண் காவலர் விளக்கம்

குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது ஏன்?: பெண் காவலர் விளக்கம்
குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது ஏன்?: பெண் காவலர் விளக்கம்

பெங்களூரில், குப்பைத் தொட்டியில் கிடந்த அனாதை குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் குப்பைத் தொட்டியில், பிறந்த குழந்தை ஒன்று கிடப்பதாக போலீஸுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்துக்குச் சென்று குழந்தையை மீட்டனர். குழந்தை ரத்தக்காயத்துடன் அழுதுகொண்டிருந்தது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். இருந்தும் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. அதைக் கண்ட அர்ச்சனா என்ற பெண் போலீஸ் குழந்தையை வாங்கி தாய்பால் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் குழந்தை அழுகையை நிறுத்தியது. இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பானது. இந்த மனிதாபிமானச் செயலுக்காக பெண் போலீஸ் அர்ச்சனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கர்நாடக முதல்வர் குமாராசமியும் ட்விட்டரில் அர்ச்சனாவைப் பாராட்டியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி அர்ச்சனா கூறும்போது, ’பேறுகால விடுப்பு முடிந்து சமீபத்தில்தான் நான் வேலையில் மீண்டும் சேர்ந்தேன். எனக்கு ஐந்து மாத ஆண் குழந்தை உள்ளது. கைவிடப்பட்ட குழந்தை பற்றி தகவல் வந்ததும் நாங்கள் விரைந்து சென்று அதை மீட்டோம். குழந்தையை கைகளால் தூக்கினேன். அப்போதுதான் குழந்தை பிறந்திருக்க வேண்டும். ரத்தக் காயமும் இருந்தது.

உடனடியாக அருகில் இருந்த லட்சுமி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். டாக்டர்கள் குழந்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். உடனே குழந்தை அழத் தொடங்கியது. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. அது பசிக்காக அழுகிறது என புரிந்தது. யோசிக் காமல் தாய்ப்பால் கொடுத்தேன். சிறிது நேரத்தில் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது. நான் பால் கொடுக்கும்போது என் மகன் அஷித்துக்கு கொடுப்பதாக நினைத்துக்கொண்டேன். தாய்ப்பால் கொடுத்ததை தவிர நான் வேறு ஒன்றும் செய்யவில்லை’ என்றார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com