தினசரி பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்..!

தினசரி பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்..!

தினசரி பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்..!
Published on

கர்நாடாக பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் தலைமையாசியர் ஒருவர் நாள்தோறும் பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்து மற்ற ஆசியர்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்.

பொதுவாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள் என பலரும் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் கர்நாடகாவில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் ஒருவர், தனது ஆசிரியர் பணியையும் தாண்டி தினம்தோறும் பள்ளி கழிவறைகளையும் சுத்தும் செய்து வருகிறார்.கர்நாடாக மாநிலம் மைசூர் அருகே சமராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள குண்டுலூபேட்டில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மகதேஷ்வர சுவாமி. தான் பணியாற்றி வரும் இப்பள்ளியை எப்படியாவது நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என எண்ணிய மகதேஷ்வர சுவாமி, அதற்காக பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.

மாணவர்கள் பாடப்புத்தங்களையும் தாண்டி வெளி உலகத்தையும் தெரிந்து கொள்ள தன் சொந்த செலவில் பள்ளியின் நூலகத்தை மேம்படுத்தியுள்ளார். அத்துடன் பள்ளியை சுற்றிலும் மரங்கள் வைத்து அதனை தோட்டமாக்கியுள்ளார். மற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மகதேஷ்வர சுவாமி சிறந்த முன்உதாரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பள்ளிக்கு காலையில் வந்தததும் கழிவறையை சுத்தும் செய்யும் மகதேஷ்வர சுவாமி, அதன்பின் அங்குள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது என மற்ற வேலைகளை கவனிக்கிறார். அதனைத்தொடர்ந்து சரியான நேரத்தில் ஆசிரியர் பணியை மேற்கொள்கிறார். அத்துடன் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என மாணவர்களுக்கும் சிறந்த முறையில் அறிவுரை வழங்குகிறார் மகதேஷ்வர சுவாமி. தலைமை ஆசிரியரின் சிறப்பான பணியால் தங்களது குழந்தைகளை நாள் தவறாமல் தினசரி பள்ளிக்கு அனுப்பவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Courtesy: The Times of India

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com