கொள்ளையடித்துவிட்டு சிசிடிவி முன்பு குத்தாட்டம் போட்ட திருடன்! வைரல் வீடியோ!
திரைப்படங்களில் நடனமாடிக் கொள்ளையடிக்கும் காட்சியைப் போல் சிசிடிவி கேமரா இருப்பது தெரிந்தும் திருடன் ஒருவன் நடனமாடிய காட்சிகள் இணையங்களில் வைரலாகி உள்ளது.
சீனாதானா திரைப்படத்தில் திருட வரும் வடிவேலு கொள்ளையடித்த பிறகு நடனமாடுவார். நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட இந்த காட்சி தற்போது நிஜமாகி உள்ளது. இந்த நகைச்சுவை காட்சி போன்ற ஒரு சம்பவம்தான் இணையங்களில் வைரலாகியுள்ளது. அகமதாபாத் அருகே காந்திநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் 5 பேர் கொண்ட கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஐந்து பேரும், அரவிந்த் படேல் என்பவரது வீட்டில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும், கல்பனா சுக்லா என்பவரது வீட்டில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் திருடிச் சென்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் படி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டிபிடிக்க போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தனர்.
அந்த காட்சியில் 5 பேர் முகத்தை மறைத்தவாறு வீட்டினுள் செல்வதும், கொள்ளை அடித்த பிறகு ஒருவர் மட்டும் கொள்ளையடித்ததை கொண்டாடும் விதமாக குத்தாட்டம் போடுவதும் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை வைத்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.